ADDED : ஜன 22, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, திருத்தேரி பகத்சிங் நகரில் உள்ள பழமையான தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து கடந்த செப்., 23ம் தேதி 15 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை, குத்துவிளக்கு திருடு போயின.
விசாரித்த மறைமலை நகர் போலீசார், ராமநாத புரத்தை சேர்ந்த கார்த்திக், 27, என்பவரை கைது செய்து, குத்துவிளக்கை பறிமுதல் செய்தனர்.
கார்த்திக்கின் கூட்டாளி யான மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 37, நேற்று கைது செய்யப்பட்டார்.