/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்
/
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர் கால் உரசி காயம்
ADDED : பிப் 13, 2024 04:31 AM
கூடுவாஞ்சேரி, : சென்னை, வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, சென்னை எழும்பூரில் இருந்து அனந்தபுரி விரைவு ரயிலில், முன்பதிவு செய்யப்படாத கடைசிப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்ற போது, நடைமேடையில் அவரது இரண்டு கால்களும் சிக்கி காயமடைந்தார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் தயானந்தன், ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.