/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும்
/
மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும்
ADDED : செப் 30, 2025 01:08 AM

கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு 20-11ம் ஆண்டு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இதில், வார்டு 6,7,9க்கு உட்பட்ட வடகால் வடபாதி அம்பேத்கர் நகர், தென்பாதி எம்.ஜி.ஆர்., நகர், மெஜெஸ்டிக் அவென்யூ, சாய் கோல்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் செடிகள் வளர்ந்து, தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ளன.
கனமழைக்கு, இந்த கால்வாய் வழியாக மழைநீர் வெளியேற தடை ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, உள்ளாட்சித் துறை நிர்வாகம் காலம் தாழ்த்தாமல், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தரி சுப்ரமணியன்,
முன்னாள் தலைவர், ஆத்துார்.