/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தூர்வாரப்படும் வடிகால்வாய் வெங்கலேரி வாசிகள் மகிழ்ச்சி
/
தூர்வாரப்படும் வடிகால்வாய் வெங்கலேரி வாசிகள் மகிழ்ச்சி
தூர்வாரப்படும் வடிகால்வாய் வெங்கலேரி வாசிகள் மகிழ்ச்சி
தூர்வாரப்படும் வடிகால்வாய் வெங்கலேரி வாசிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 28, 2024 01:04 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த வெங்கலேரி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, வழிபாட்டு மையங்கள் உள்ளன.
இப்பகுதியில் மழைநீர் வெளியேற வசதியாக, வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக மழைநீர், பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்கிறது.
நாளடைவில், இந்த வடிகால்வாய் தூர்ந்து கழிவு நீர், குப்பை கழிவுகள் தேங்கியது. சில இடங்களில் முட்செடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுநீர், மழைநீர் முழுமையாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே, வடிகால்வாயில் தேங்கிய கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாயிலாக கால்வாயில் தேங்கிய கழிவுநீர், மண் திட்டுக்கள், முட்செடிகள் அகற்றப்பட்டு உள்ளன. தற்போது கழிவுநீர், மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் உள்ளது.