/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
/
செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 15, 2024 01:30 AM

செங்கல்பட்டு:செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் துறையினர், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா அலுவலகத்தில், ஜாமாபந்தி கூட்டம் கடந்த ஜூன் 27ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பனையூர் பாபு பங்கேற்று, செய்யூர் வருவாய் ஆய்வாளர் கல்பனாவிடம், வாரிசு சான்றிதழ் ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேட்டார்.
அதற்கு, வருவாய் ஆய்வாளர் வாரிசு சான்றிதழில், இறந்தவருக்கு இரண்டு மனைவி உள்ளதால், மனுவை பரிந்துரை செய்யவில்லை என, கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., வருவாய் ஆய்வாளரை மிரட்டியும், வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரியும் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தார்.
இதனை கண்டித்து, வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில், அப்போதே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, எம்.எல்.,ஏ., பனையூர் பாபு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 22 பேர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வருவாய்த் துறையினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் வெங்கட்ரமணன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில், காத்திருப்பு போராட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன உதவியாளர் சங்கம், தமிழ்நாடு நில அளவை சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தால், மாவட்டத்தில் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.