/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டாக கவனிக்கப்படாத சாலை மாம்பாக்கத்தில் தொடரும் அவலம்
/
10 ஆண்டாக கவனிக்கப்படாத சாலை மாம்பாக்கத்தில் தொடரும் அவலம்
10 ஆண்டாக கவனிக்கப்படாத சாலை மாம்பாக்கத்தில் தொடரும் அவலம்
10 ஆண்டாக கவனிக்கப்படாத சாலை மாம்பாக்கத்தில் தொடரும் அவலம்
ADDED : ஜூலை 11, 2025 01:38 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே மாம்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக கவனிக்கப்படாத சாலையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி ஐந்தாவது வார்டில், எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் அவென்யூ சாலை உள்ளது. இச்சாலையில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக, இச்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.
மழைக்காலங்களில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
இதுகுறித்து, இப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.