/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீசுக்கு பயந்து பிரேஸ்லெட் விழுங்கிய ரவுடி
/
போலீசுக்கு பயந்து பிரேஸ்லெட் விழுங்கிய ரவுடி
ADDED : அக் 01, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, - சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் கஜலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40. இவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி விக்னேஷ், 25, கார்த்திக், 24, அபிமன்யு, 27, ஆகிய மூவரை, நேற்று முன்தினம் அமைந்தகரை போலீசார் கைது செய்தனர்.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது, விக்னேஷ் திடீரென, தான் கையில் அணிந்திருந்த 'பிரேஸ்லெட்டை' விழுங்கினார்.
அது, அவரது தொண்டையில் சிக்கியதால் துடித்தார். உடனே, போலீசார் விக்னேஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மற்ற இருவரையும், சிறையில் அடைத்தனர்.