/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்த சானடோரியம் ரயில்வே நடைமேம்பாலம்
/
பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்த சானடோரியம் ரயில்வே நடைமேம்பாலம்
பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்த சானடோரியம் ரயில்வே நடைமேம்பாலம்
பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்த சானடோரியம் ரயில்வே நடைமேம்பாலம்
ADDED : பிப் 19, 2024 11:45 PM

தாம்பரம்:தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தை, சிட்லப்பாக்கம், கிழக்கு தாம்பரம் பகுதி மக்கள் என, தினமும் 20,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தை கடக்க, சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
லேசான மழை பெய்தாலே, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடுவதால், மக்களால் பயன்படுத்த முடியவில்லை.
தண்ணீர் வடியும் வரை, ஆபத்தான வகையில் தண்டவாளம் வழியாக மேற்கு - கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
மற்றொரு புறம், தண்டவாளத்தில் நடந்து சென்று, ரயில் ஏறும் சூழலும் நிலவுகிறது. இதனால், ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதை தடுக்கும் வகையில், பொதுமக்களின் வசதிக்காக, மேற்கு - கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில், நடைமேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மேற்கின் ஸ்டேஷன் பார்டர் சாலையில் இருந்து, கிழக்கு பகுதியில் சுரங்க நடைபாதையை ஒட்டி இறங்கும் வகையில், நடைமேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இப்பணிகள் முடிந்ததை அடுத்து, நடைமேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இந்த நடைமேம்பாலம் மேற்கு - கிழக்கு பகுதிகளை இணைக்கிறது. அதோடு, தண்டவாளத்திற்கு செல்லும் வகையில், படிக்கட்டு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், முதியோர், பெண்களின் வசதிக்காக, நகரும்படிகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

