/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் கிணறின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் கிணறின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
பெரும்பாக்கத்தில் குடிநீர் கிணறின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
பெரும்பாக்கத்தில் குடிநீர் கிணறின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
ADDED : அக் 12, 2024 11:19 PM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாக்கத்தில் உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே குடிநீர் கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய் வாயிலாக, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, ஏரியில் நீர் நிரம்பி உள்ளது. இதனால், கிணற்றில் ஏற்பட்ட நீர் ஊற்றின் காரணமாக, நேற்று அதிகாலை திடீரென சுற்றுச்சுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்து தரைமட்டமானது.
இதன் காரணமாக, பெரும்பாக்கம் காலனி பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, காமராஜர் தெரு மற்றும் நடுத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், மற்ற குடிநீர் கிணற்றில் இருந்தும், ஆழ்துளை கிணற்றில் இருந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்.
எனவே, புதிதாக குடிநீர் கிணறு அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.