/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
/
அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : மார் 18, 2024 03:29 AM

செங்கல்பட்டு : லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் வந்தன.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளை மறைக்கும் பணி மற்றும் கட்சி கொடி கம்பம், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நகரசபை தலைவர்கள், ஒன்றியகுழு தலைவர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை ஒப்படைக்க, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தாசில்தார் பூங்குழலி, வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், செங்கல்பட்டு சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்து, கதவு மற்றும் நுழைவாயில் உள்ள இரும்பு கேட்டிற்கு, நேற்று சீல் வைத்தனர்.
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்கள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள், சுவரொட்டிகளை, பேரூராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது.

