/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழிமறித்து தாக்கும் கும்பல் 'டாஸ்மாக்' ஊழியர்கள் பீதி
/
வழிமறித்து தாக்கும் கும்பல் 'டாஸ்மாக்' ஊழியர்கள் பீதி
வழிமறித்து தாக்கும் கும்பல் 'டாஸ்மாக்' ஊழியர்கள் பீதி
வழிமறித்து தாக்கும் கும்பல் 'டாஸ்மாக்' ஊழியர்கள் பீதி
ADDED : மார் 05, 2024 03:47 AM
சென்னை, : திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில், 8819 எண் கொண்ட மதுக்கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர் ரமேஷ், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பும் போது, சமூக விரோதிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
மதுக்கடைகளில் மது பாட்டில்களை கடனுக்கு வழங்குமாறு சிலர் தொந்தரவு செய்கின்றனர். தர மறுத்தால்தாக்குகின்றனர். எனவே, ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர் ரமேஷ் மீதான தாக்குதலுக்கு காரணத்தை கண்டறிந்து, அவர்கள் மேல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.