/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பியர்லஸ் பைட்டர்ஸ்' அணி மகளிர் கிரிக்கெட்டில் சாம்பியன்
/
'பியர்லஸ் பைட்டர்ஸ்' அணி மகளிர் கிரிக்கெட்டில் சாம்பியன்
'பியர்லஸ் பைட்டர்ஸ்' அணி மகளிர் கிரிக்கெட்டில் சாம்பியன்
'பியர்லஸ் பைட்டர்ஸ்' அணி மகளிர் கிரிக்கெட்டில் சாம்பியன்
ADDED : பிப் 22, 2024 10:46 PM

சென்னை, மாஸ்டர் கிரிக்கெட் கிளப் சார்பில், தி ஸ்போர்ட்ஸ் ஸ்டோரியின் 'யங் டேலன்ட்ஸ்' கோப்பைக்கான மாநில மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது.
போட்டிகள், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள ஸ்டாக் மற்றும் பி.எஸ்.எம்., கிரிக்கெட் மைதானத்தில், 10 நாட்கள் நடந்தன.
இதில், மாநிலம் முழுதும் இருந்து, 19 வயதுக்கு உட்பட்ட மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகளின் முடிவில், நேற்று நடந்த 30 ஓவருக்கான இறுதிப் போட்டி, 'பியர்லஸ் பைட்டர்ஸ்' மற்றும் 'ஸ்பார்க் கிரிக்கெட்' அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பியர்லஸ் பைட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 173 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த ஸ்பார்க் கிரிக்கெட் அணி, 30 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 84 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால், 89 ரன்கள் வித்தியாசத்தில், பியர்லஸ் பைட்டர்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவரும் திருவள்ளூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருமான பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மகளிர் பயிற்சியாளர் சிமிலால் சிங் ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.