/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காதலர்களை மிரட்டி வழிப்பறி போலீசாரிடம் சிக்கிய வாலிபர்
/
காதலர்களை மிரட்டி வழிப்பறி போலீசாரிடம் சிக்கிய வாலிபர்
காதலர்களை மிரட்டி வழிப்பறி போலீசாரிடம் சிக்கிய வாலிபர்
காதலர்களை மிரட்டி வழிப்பறி போலீசாரிடம் சிக்கிய வாலிபர்
ADDED : ஜன 12, 2024 12:03 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் போலீசார், பூஞ்சேரி சந்திப்பு பகுதியில், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி நோக்கி, 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர்.
அதில், அவரிடம் வாகன ஆவணங்கள் இல்லை என்பதும், வாகன பதிவெண் போலி என்பதும் தெரிந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அது குறித்து போலீசார் கூறியதாவது:
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன், 43, என்பவர், மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை மாதம் முதல், சாலையில் சென்ற பெண்களிடம் வழிப்பறி செய்து வந்துள்ளார்.
அதோடு, தன்னை போலீஸ் எனக்கூறி காதலர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார்.
இவர் மீது, மாமல்லபுரத்தில் ஐந்து, திருப்போரூரில் இரண்டு, சதுரங்கப்பட்டினத்தில் ஒன்று என, வழக்குகள் உள்ளன. இதுபோன்ற வழக்குகள், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம், செய்யூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் மீது உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
நீதிமன்ற நிலுவையில், 54 வழக்குகள் உள்ளன. அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 29 சவரன் நகைகள், மொபைல் போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.