/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளிக்கு சீர் வரிசை கிராம மக்கள் அசத்தல்
/
பள்ளிக்கு சீர் வரிசை கிராம மக்கள் அசத்தல்
ADDED : மார் 20, 2025 01:54 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுக்கரணை ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
காட்டுக்கரணை ஊராட்சியில், தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று, 90ஆவது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஊராட்சிமன்ற தலைவர் தர்மராஜ் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் சேர்ந்து, பள்ளிக்கு தேவையான பொருட்கள், மாணவ, மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்கள் போன்றவற்றை வாங்கி, பள்ளிக்கு சீர்வரிசையாக கொண்டு சென்றனர்.
இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பேச்சு, கவிதை, நடன போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சையம்மாள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில், முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.