/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
15 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாலை வெண்ணாங்குப்பட்டு கிராமத்தினர் அவதி
/
15 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாலை வெண்ணாங்குப்பட்டு கிராமத்தினர் அவதி
15 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாலை வெண்ணாங்குப்பட்டு கிராமத்தினர் அவதி
15 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாலை வெண்ணாங்குப்பட்டு கிராமத்தினர் அவதி
ADDED : ஏப் 10, 2025 01:52 AM

செய்யூர்:வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், 15 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாலையைப் பயன்படுத்த முடியாமல், கிராமத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 21வது வார்டுக்கு உட்பட்ட இந்த கிராமத்திலிருந்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் 1.5 கி.மீ., துாரமுள்ள பஜனை கோவில் சாலை உள்ளது.
தார்ச்சாலையாக இருந்த இந்த சாலை நாளடைவில் சேதமடைந்து, தற்போது மண்சாலை போன்று மாறியுள்ளது.
இந்த சாலையில் தினமும் இரு சக்கர வாகனம், கார், பேருந்து என, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் கோட்டைக்காடு, வேம்பனுார் பகுதியில் இருந்து வந்து, வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர், இந்த சாலை வழியாக தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இச்சாலை, கடந்த 15 ஆண்டுகளாக பழுதடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.