/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணம் பெற்று ஏமாற்றிய நபரை பிடித்து ஒப்படைத்த பெண்கள்
/
பணம் பெற்று ஏமாற்றிய நபரை பிடித்து ஒப்படைத்த பெண்கள்
பணம் பெற்று ஏமாற்றிய நபரை பிடித்து ஒப்படைத்த பெண்கள்
பணம் பெற்று ஏமாற்றிய நபரை பிடித்து ஒப்படைத்த பெண்கள்
ADDED : அக் 20, 2024 12:16 AM
குரோம்பேட்டை:நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 வயது பெண், தாம்பரம் கடப்பேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, நர்சிங் வேலை பார்க்கிறார்.
அவர், மேன் பவர் ஏஜன்சீஸ் நடத்தி வரும், கீழ்க்கட்டளையை சேர்ந்த சங்கீதா என்பவரை தொடர்புகொண்டு, நல்ல ஊதியத்தில் வேலை வாங்கி தருமாறு அணுகியுள்ளார்.
இதேபோல காஞ்சிபுரம், சோழிங்கநல்லுாரை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களும், சங்கீதாவிடம் வேலை வாங்கி தருமாறு அணுகி, தங்களுடைய பயோடேட்டாவை அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், சங்கீதாவிற்கு பழக்கமான, திருவான்மியூரை சேர்ந்த பிரபு, 36, என்பவர், பயோடேட்டாவில் உள்ள விபரங்களை எடுத்து, அக்., 16ம் தேதி, மூன்று பெண்களையும் மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தகவல் தொழில்நுட்ப துறையில் 40,000 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக, மூன்று பெண்களிடம், தலா 25,000 ரூபாய் பெற்றுள்ளார். பின், வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் தொடர்பை துண்டிக்க, அவர்களின் மொபைல் எண்களை பிளாக் செய்துள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூன்று பெண்களும், நேற்று முன்தினம் மாலை பிரபுவிடம் லாவகமாக பேசி, குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரவைத்துள்ளனர். அங்கு வந்ததும், மூன்று பெண்களும் சேர்ந்து பிரபுவை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, குரோம்பேட்டை போலீசார் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.