/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர் இன மக்களுக்கு வீடு கட்டும் பணி 'விறுவிறு'
/
இருளர் இன மக்களுக்கு வீடு கட்டும் பணி 'விறுவிறு'
ADDED : பிப் 22, 2024 10:40 PM

மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சி தாசரி குன்னத்துார் கிராமத்தில், பல ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு நிரந்தர வீட்டுமனை இல்லாததால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு, அதே பகுதியில் அரசால் நிலம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு பழங்குடியினருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 22 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு வீட்டிற்கு, தலா 4.62 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, இந்த பகுதியில் புதிய மின் இணைப்புகளுக்காக மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அமைக்கும் பணிகளில், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.