/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்
/
புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்
புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்
புதுச்சேரி சாலை மையத்தடுப்பில் மலர் செடிகள் நடும் பணி தீவிரம்
ADDED : நவ 23, 2024 01:05 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, முந்தைய கிழக்கு கடற்கரை சாலை, 2018ல் தேசிய நெடுங்சாலையாக மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் - முகையூர், முகையூர் - மரக்காணம், மரக்காணம் - புதுச்சேரி ஆகிய மூன்று பிரிவுகளாக, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தும் பணி, தற்போது தீவிரமாக நடக்கிறது.
இச்சாலையில், மையதடுப்பும் அமைக்கப்படுகிறது. மாமல்லபுரம் - முகையூர் பிரிவில், மையத்தடுப்பு முழுதுமாக அமைக்கப்பட்ட பகுதிகளில், கிராவல் மண் நிரப்பி சமன் செய்யப்பட்டது.
தற்போது, மையத்தடுப்பில் நிரவப்பட்ட மண் பரப்பில், அரளி உள்ளிட்ட மலர்ச் செடிகள் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.