நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்: பெருங்களத்துாரை சேர்ந்த, 23 வயது பெண் ஒருவர், குரோம்பேட்டையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். நவ., 4ம் தேதி முதல், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அது குறித்து அவரது பெற்றோர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

