/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 30, 2024 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஜெ.ஜெ.நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 50. கொத்தனார். இவரின் மனைவி அஞ்சலை, 40.
நேற்று முன்தினம் காலை, இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில், அஞ்சலை மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.