/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் துாக்கிட்டு தேனி வாலிபர் தற்கொலை
/
செங்கல்பட்டில் துாக்கிட்டு தேனி வாலிபர் தற்கொலை
ADDED : அக் 01, 2024 07:31 PM
மறைமலை நகர்:தேனி மாவட்டம், வரதராஜபுரம் நகரை சேர்ந்தவர் சதிஷ், 33. செங்கல்பட்டு ஜெ.சி.கே., நகரில் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு, திருமணமாகி நிவேதா என்ற மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சதிஷ் வீட்டில் இருந்தபோது, தம்பதியிடையே சண்டை ஏற்பட்டு உள்ளது.
இதில் விரக்தியடைந்த சதிஷ், தன் அறைக்கு சென்று, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு நகர போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

