/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேன்பாக்கம் காளியம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசை
/
தேன்பாக்கம் காளியம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசை
தேன்பாக்கம் காளியம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசை
தேன்பாக்கம் காளியம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசை
ADDED : ஆக 06, 2025 02:09 AM

சூணாம்பேடு:தேன்பாக்கம் கிராமத்தில், காளியம்மன் கோவில் 85ம் ஆண்டு ஆடி திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.
சூணாம்பேடு அருகே தேன்பாக்கம் கிராமத்தில், பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை, ஆடி திருவிழா விமரிசையாக நடக்கும்.
அதே போல இந்தாண்டு, 85ம் ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 4ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது.
இதில், பக்தர்கள் பழம் குத்தி, செடல் ஏந்தி, வண்டி இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின், கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு, சுவாமி வழிபாடு செய்தனர்.
இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், பத்ரகாளியம்மன் வீதியுலா நடந்தது.
தேன்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.