sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 76 ஊராட்சிகளில் குடிநீருக்கு... தட்டுப்பாடு! :ரூ.2.46 கோடியில் பணிகள் துவக்க முடிவு

/

செங்கையில் 76 ஊராட்சிகளில் குடிநீருக்கு... தட்டுப்பாடு! :ரூ.2.46 கோடியில் பணிகள் துவக்க முடிவு

செங்கையில் 76 ஊராட்சிகளில் குடிநீருக்கு... தட்டுப்பாடு! :ரூ.2.46 கோடியில் பணிகள் துவக்க முடிவு

செங்கையில் 76 ஊராட்சிகளில் குடிநீருக்கு... தட்டுப்பாடு! :ரூ.2.46 கோடியில் பணிகள் துவக்க முடிவு


ADDED : மே 25, 2024 11:20 PM

Google News

ADDED : மே 25, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 76 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக, 2.46 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கோடை காலத்தில் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், தினமும் ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு, குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பின், 359 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் கள ஆய்வு செய்தனர்.

இதில், திருப்போரூர் ஊரட்சி ஒன்றியத்தில், 50 ஊராட்சிகளில் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அச்சிறுப்பாக்கத்தில் 18 ஊராட்சிகள், மதுராந்தகத்தில் 17 ஊராட்சிகள், சித்தாமூரில் 18 ஊராட்சிகள்.

லத்தாரில், 12 ஊராட்சிகள், திருக்கழுக்குன்றத்தில் மூன்று ஊராட்சிகள், காட்டாங்கொளத்துாரில் நான்கு ஊராட்சிகள், புனிததோமையார்மலையில் நான்கு என, மொத்தம் 76 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஊராட்சிகளில் கிணறுகள் மற்றும்ஆழ்துளை கிணறுகளை துார்வாரி சீரமைக்க வேண்டும். பைப் லைன் விஸ்திரி மற்றும் புதிய மோட்டார்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன்பின், ஊராட்சிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், குடிநீர் பணிகள் செய்ய, 2.46 கோடி ரூபாய் நிதி கேட்டு, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் தமிழக அரசுக்கு, ஊரக வளர்சித் துறையினர் கருத்துரு அனுப்பி உள்ளனர். இப்பணியை விரைந்து துவக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 76 ஊராட்சிகளில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிதி கிடைத்தவுடன், பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

வட்டாரம் ஊராட்சிகள் லட்சம் (ரூபாய்)


அச்சிறுப்பாக்கம் 18 59.50
மதுராந்தகம் 17 43.90
சித்தாமூர் 18 39.50
லத்துார் 12 25.05
திருக்கழுக்குன்றம் 3 10.00
காட்டாங்கொளத்துார் 4 53.96
புனிததோமையார்மலை 4 14.75
மொத்தம் 76 246.66








      Dinamalar
      Follow us