/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தம் இருக்கு... நிழற்குடை எங்கே? இடைக்கழிநாடு பயணியர் எதிர்பார்ப்பு

ADDED : அக் 28, 2024 11:51 PM
செய்யூர் : செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் அருகே, கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இச்சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம், செய்யூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், இந்த நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், மழை மற்றும் கோடை காலங்களில் வெயிலில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், மழைக்காலத்தில் நனைந்தபடி பேருந்திற்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.