/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கம்பி இருக்கு... இருக்கை எங்கே? எடையாளம் பயணியர் கடும் அவதி
/
கம்பி இருக்கு... இருக்கை எங்கே? எடையாளம் பயணியர் கடும் அவதி
கம்பி இருக்கு... இருக்கை எங்கே? எடையாளம் பயணியர் கடும் அவதி
கம்பி இருக்கு... இருக்கை எங்கே? எடையாளம் பயணியர் கடும் அவதி
ADDED : செப் 22, 2024 03:37 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு வழியாக ஒரத்தி, வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரம் உள்ள எடையாளம் பகுதி பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் பார்லிமென்ட் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2018 - -19ல், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த பேருந்து நிழற்குடையில் அச்சிறுபாக்கம், மதுராந்தகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் உடைந்து மாயமாகி உள்ளது. மேலும், இருக்கைக்கான கம்பி மட்டும் உள்ளது. இதனால், பயணியர் இருக்கையில் அமர முடியாமல் கால்கடுக்க நிழற்குடையில் நின்று, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிழற்குடையில் தலா, மூன்று பேர் அமரும் வகையில், நான்கு இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இருக்கைகளும் உடைந்து, பயன்பாடின்றி உள்ளது. மேலும், நிழற்குடையோரம் புதர்கள் வளர்ந்து, கட்டடத்தின் அடிப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சேதமடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிதாக இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.