/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அம்மன் கோவில் உண்டியலை துாக்கி சென்ற திருடர்கள்
/
அம்மன் கோவில் உண்டியலை துாக்கி சென்ற திருடர்கள்
ADDED : பிப் 20, 2025 11:53 PM
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, தண்டலம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில், அதிகளவு பக்தர்கள் சென்று, அம்மனை தரிசிப்பர். இந்த கோவிலில், ஏற்கனவே இரண்டு முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் பங்களிப்புடன், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல, கோவில் பூசாரி கார்த்திக், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே, கோவில் உண்டியல் பெயர்த்து எடுத்து சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.