/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீபாவளிக்கு கொஞ்சம் மாத்தி யோசிங்க! வாழை, மூங்கில் நார் சட்டைகள் 'ரெடி'
/
தீபாவளிக்கு கொஞ்சம் மாத்தி யோசிங்க! வாழை, மூங்கில் நார் சட்டைகள் 'ரெடி'
தீபாவளிக்கு கொஞ்சம் மாத்தி யோசிங்க! வாழை, மூங்கில் நார் சட்டைகள் 'ரெடி'
தீபாவளிக்கு கொஞ்சம் மாத்தி யோசிங்க! வாழை, மூங்கில் நார் சட்டைகள் 'ரெடி'
ADDED : அக் 09, 2024 10:53 PM

அனகாபுத்துார்:அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, வாழை, மூங்கில், பருத்தி நார்களில் இருந்து, கலர் கலரான சட்டைகள் தயார் செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனகாபுத்துாரில் இயற்கை நார் நெசவு குழுமம் இயங்கி வருகிறது. இக்குழுமம் சார்பில், வாழை, மூங்கில், அண்ணாச்சி, கற்றாழை, பருத்தி நார்களில் இருந்து புடவை, கைப்பை, பேண்ட், கைவினை பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள், தமிழகம் மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாழை, மூங்கில், பருத்தி, சணல் நார்களில் இருந்து, கலர் கலரான சட்டைகளை தயார் செய்து, இக்குழுமத்தினர் அசத்தியுள்ளனர். வாழை நார் சட்டையில், 30 சதவீதம் வாழை நாரும், 70 சதவீதம் பருத்தி நுாலும் சேர்க்கப்பட்டுள்ளன.
மூங்கில் சட்டையில், 50 சதவீதம் மூங்கில் நாரும், 50 சதவீதம் பருத்தி நுாலும் சேர்க்கப்பட்டு உள்ளன. பருத்தி சட்டையை பொருத்தவரை, 100 சதவீதம் பருத்தி நுாலால் தயார் செய்யப்பட்டு உள்ளது. சணல் நார் சட்டையில், 30 சதவீதம் சணல் நாரும், 70 சதவீதம் பருத்தி நுாலும் சேர்க்கப்பட்டுள்ளன.
இளைஞர்களை கவரும் வகையில், இயற்கை முறையிலான கலர் சாயங்களை கொண்டு, கலர் கலரான சட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இங்கு தயார் செய்யப்பட்டுள்ள வாழை நார் சட்டை - 2,500, மூங்கில் சட்டை - 1,700, பருத்தி நுால் சட்டை - 1,100, சணல் நார் சட்டை - 1,300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
'தீபாவளிக்கு வழக்கமான புத்தாடைகள் வாங்குவோர், சற்று மாற்றி யோசித்து, தங்கள் வசதிக்கேற்ப இதுபோன்ற உடைகளை வாங்கி அணியலாம். ஆர்வமுள்ளோர், 87780 31279 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்று, இயற்கை நார் நெசவு குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.