/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில அறிவியல் கண்காட்சி திருக்கழுக்குன்றம் மாணவியர் முதலிடம்
/
மாநில அறிவியல் கண்காட்சி திருக்கழுக்குன்றம் மாணவியர் முதலிடம்
மாநில அறிவியல் கண்காட்சி திருக்கழுக்குன்றம் மாணவியர் முதலிடம்
மாநில அறிவியல் கண்காட்சி திருக்கழுக்குன்றம் மாணவியர் முதலிடம்
ADDED : டிச 11, 2025 05:44 AM

திருக்கழுக்குன்றம்: பள்ளிகள் இடையே நடத்தப்பட்ட மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், முதலிடம் வென்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளிகள் இடையே மாணவ - மாணவியர் பங்கேற்ற, மாநில அறிவியல் கண்காட்சி, கோயம்புத்துாரில் சமீபத்தில் நடந்தது.
மாணவியரில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த, 228 மாணவியர், மூன்று பிரிவுகளின் கீழ் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில், இரண்டு மாணவியர் - ஒரு ஆசிரியை பிரிவின் கீழ், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சோபியா, லோகநாயகி மற்றும் இடைநிலை ஆசிரியை தேவமனோகரி ஆகியோர் குழு பங்கேற்றனர்.
இக்குழு, விண்வெளி யில் ஆய்வாளர்கள் உடலையோ, ஆய்வையோ பாதிக்காத வகையில் பதப்படுத்திய உணவு உண்பது, சிறுநீரையே சுத்திகரித்து குடிநீராக அருந்துவது உள்ளிட்டவை சார்ந்த படைப்பை காட்சிப்படுத்தி விளக்கி, மாநில அளவில் முதலிடம் வென்றனர்.
இதையடுத்து, தென் மாநில அளவில் அடுத்த மாதம், ஆந்திர மாநிலத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, தலைமையாசிரியை காயத்ரி ஆகியோர், இவர்களை பாராட்டினர்.

