/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்வாயில் வேறு பகுதியினருக்கு இடம் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல்

ADDED : டிச 11, 2025 05:42 AM

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே கல்வாய் பகுதி உள்ளது.
இப்பகுதியில் உள்ள சர்வே எண் 246, 247ல், அரசு தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை வகைப்பாடு மாற்றி, வண்டலுார் தாலுகாவில் அடங்கிய வண்டலுார், காரணை புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 39 இருளர் குடும்பங் களுக்கு நிலம் ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
நேற்று, மேற்கண்ட நிலத்தை கையகப்படுத்தி அளவீடு செய்ய வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வருவதாக இருந்துள்ளது.
இதையறிந்த கல்வாய் பகுதி மக்கள், நெல்லிக்குப்பம் - கூடுவாஞ்சேரி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காயார் போலீசார், அவர் களிடம் பேச்சு நடத்தினர்.
'அமைதி கூட்டம் நடத்தி, மாவட்ட உயரதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதையடுத்து, கல்வாய் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.