/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பாலாறு பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்
/
செங்கை பாலாறு பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்
செங்கை பாலாறு பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்
செங்கை பாலாறு பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்
ADDED : டிச 11, 2025 05:41 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பாலாறு பாலத்தில், பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த ஒழ லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36. நேற்று மதியம் 2:00 மணியளவில், ஒழலுார் ஏரியில் மீன் பிடித்த இவர், மாமண்டூர் பகுதியில் விற்பனை செய்ய, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார்.
ஜி.எஸ்.டி., சாலை, பாலாறு பாலத்தில் சென்ற போது, பைக் திடீரென தீப் பற்றி எரிய துவங்கியுள்ளது. உடனே, மணிகண்டன் பைக்கை சாலையோரம் நிறுத்தி விட்டு துாரமாக ஓடினார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செங்கல் பட்டு தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.