/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்டலக்குழு கூட்டம் அ.தி.மு.க., புறக்கணிப்பு
/
மண்டலக்குழு கூட்டம் அ.தி.மு.க., புறக்கணிப்பு
ADDED : டிச 11, 2025 05:05 AM
தாம்பரம்: கிழக்கு தாம்பரத்தில் தங்கள் வார்டுகளில் பணி புறக்கணிக்கப்படுவதால், மண்டல குழு கூட்டத்தை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி, கிழக்கு தாம்பரம் ஐந்தாவது மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் இந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. 13 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்படாமல், ஒன்பது தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
மண்டல தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த இந்திரன், மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவதே இல்லை. ஐந்து மாதங்களாக கூட்டமே நடத்தவில்லை.
அ.தி.மு.க.,வின் 47வது வார்டு கவுன்சிலர் சாய்கணேஷ், 65வது வார்டு கவுன்சிலர் சங்கர், 66வது வார்டு கவுன்சிலர் வாணி, 69வது வார்டு கவுன்சிலர் வாட்டர் ராஜி, 70வது வார்டு கவுன்சிலர் தேவேந்திரன் ஆகிய ஐந்து கவுன்சிலர்களின் வார்டுகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.
நாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளையும் கண்டுகொள்வதே இல்லை. இதற்கெல்லாம் வரும் தேர்தலில், மக்கள் பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

