/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க எதிர்ப்பு
/
திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க எதிர்ப்பு
திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க எதிர்ப்பு
திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க எதிர்ப்பு
ADDED : மார் 18, 2025 12:36 AM

திருப்போரூர்; திருப்போரூர் பேரூராட்சி, கந்தசுவாமி கோவில் தெற்கு மாடவீதியில், சார் - -பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளில் உள்ள திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், கானத்துார், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கான நிலப்பதிவுகள், இங்கு செய்யப்படுகின்றன.
தமிழகத்திலேயே அதிக வருவாய் அளிக்கும் சார் - -பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தை திருப்போரூர் பிடித்துள்ளது.
இந்நிலையில், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தற்காலிக கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, திருப்போரூக்கு தெற்கில் உள்ள ஆலத்துார், கருங்குழிப்பள்ளம், பையனுார், சிறுதாவூர், ஆமூர், அதிகமநல்லுார் ஆகிய கிராமங்கள், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதே சரியானது.
அனால், இந்த கிராமங்கள் தற்போது கேளம்பாக்கம் அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ள்ன.அதேபோல், கேளம்பாக்கத்தை ஒட்டியுள்ள படூர், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்கள், நாவலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளிச்சை, கொளத்துார் கிராமங்களை, அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சேர்க்காமல், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த குளறுபடியான பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சிகளின் சார்பில், நேற்று திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
இதற்காக, பெண்கள் உட்பட அனைத்து கட்சியினர், 300க்கும் மேற்பட்டோர் திருப்போரூரில் திரண்டனர். இந்நிலையில், திருப்போரூர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என, தெரிவித்தனர். அதனால், ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட அனைவரும், சார் - பதிவாளரை சந்தித்து மனு அளித்தனர்.