/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்
/
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் இன்று மஹா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2025 02:05 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர், கடப்பேரி பகுதியில், புகழ்பெற்ற மீனாட்சி அம்மாள் உடனுறை திருவெண்காட்டீஸ்வரர் திருகோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது.
இதையடுத்து, கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பந்தக்கால் நடப்பட்டு, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹாவசனம், தனபூஜை, கோ பூஜை, கஜ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, கிராம தேவதை உற்சவத்துடன் முதல் கால பூஜை துவங்கி நடைபெற்றது.
பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
இன்று, காலை, நான்காம் கால யாக பூஜையுடன், மேளதாளங்கள் முழங்க, காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், ராஜ கோபுரம் மற்றும் விமானங்கள், பரிவார மூர்த்திகள், ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ வெண்காட்டீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பின், நண்பகல் மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் இரவு 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்தி திருவீதி உலா நடைபெற உள்ளது.