/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குவாரி குத்தகை உரிமம் வேண்டுவோர் இணையத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
/
குவாரி குத்தகை உரிமம் வேண்டுவோர் இணையத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
குவாரி குத்தகை உரிமம் வேண்டுவோர் இணையத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
குவாரி குத்தகை உரிமம் வேண்டுவோர் இணையத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
ADDED : ஏப் 10, 2025 08:07 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில், குவாரி குத்தகை உரிமம் கோரி நேரடியாகவும் அல்லது தபால் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள், ஏப்., 6ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல், செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும், (http;//mimas.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும்.
எனவே விண்ணப்பதாரர்கள் இனிவரும் காலங்களில், மேற்கண்ட இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.