/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி மாணவரை தாக்கி லேப்டாப் பறித்தோர் கைது
/
கல்லுாரி மாணவரை தாக்கி லேப்டாப் பறித்தோர் கைது
ADDED : மார் 18, 2024 03:29 AM

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அபியுதயா, 18, என்பவர், நண்பர்களுடன் வசித்து வருகிறார்.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வரும் இவர், நேற்று வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட நான்கு பேர், அவரை கத்தி மற்றும் கிரிக்கெட் மட்டையால் தாக்கி, அவரிடமிருந்து இரண்டு லேப்டாப், மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வந்த கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார், அப்பகுதியில் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர்.
அதன்படி விசாரித்த போலீசார், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆறுமுகம், 20, பெரம்பூரைச் சேர்ந்த தீபக், 22, படப்பையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20, பெருங்களத்துாரைச் சேர்ந்த ஆனந்த், 22, என்பது தெரிந்தது.
அவர்கள் நால்வரும், கல்லுாரி மாணவரை தாக்கி, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்த இரண்டு லேப்டாப்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

