/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரியாணி கடையில் பணம் பறித்தோர் கைது
/
பிரியாணி கடையில் பணம் பறித்தோர் கைது
ADDED : ஜூன் 29, 2025 10:26 PM
தாம்பரம்:தாம்பரத்தில், பிரியாணி கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம், காந்தி சாலையில் மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. இந்த கடைக்கு, நேற்று முன்தினம் சென்ற இருவர், சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி, அதற்கான பணத்தை தர மறுத்துள்ளனர்.
பிரியாணிக்கான பணத்தை ஊழியர்கள் கேட்டபோது, அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கடையின் கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் பறித்து, பிரியாணியுடன் தப்பி சென்றனர்.
இது குறித்து விசாரித்த தாம்பரம் போலீசார், கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கத்தியை காட்டி மிரட்டியது, கடப்பேரியைச் சேர்ந்த சச்சின், 25, மதன், 28, என்பது தெரிய வந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.