/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமூல் கேட்டு கடைக்காரரை வெட்டிய மூவர் கைது
/
மாமூல் கேட்டு கடைக்காரரை வெட்டிய மூவர் கைது
ADDED : பிப் 08, 2024 10:41 PM

சென்னை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். சோலையப்பன் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு வந்த மூன்று வாலிபர்கள், சங்கரனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், சங்கரனின் பின்பக்க தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த சங்கரனை அங்கிருந்தோர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், ராயபுரம், கிரேஸ் கார்டனைச் சேர்ந்த ஆனந்தமுருகன் என்ற குள்ளமுருகன், 19, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற சியான், 21, பழைய வண்ணாரப்பேட்டை, என்.எஸ்.கார்டனைச் சேர்ந்த பிரணவ் ராயன், 19, ஆகிய மூவரும், மாமூல் கேட்டு மிரட்டியது தெரிந்தது.
நேற்று இவர்கள் மூவரும், காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

