/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது செங்கையில் துணிக்கடையில் திருடிய மூவருக்கு 'காப்பு'
/
பொது செங்கையில் துணிக்கடையில் திருடிய மூவருக்கு 'காப்பு'
பொது செங்கையில் துணிக்கடையில் திருடிய மூவருக்கு 'காப்பு'
பொது செங்கையில் துணிக்கடையில் திருடிய மூவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 14, 2025 11:58 PM

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு பாசி தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி, 48. செங்கல்பட்டு மணிகூண்டு அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 7ம் தேதி காலை, இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், மன்சூர் அலிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த 50,000 ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.
மேலும், அருகில் இருந்த சம்ஸ்கனி, 50, என்பவரின் துணிக்கடையில் 3,000 ரூபாயும், தினேஷ் என்பவரின் கடையில் 5,500 ரூபாயும் திருடப்பட்டது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், சென்னை மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண், 22, அவரது நண்பர்களான வெள்ளை செல்வா, 20, நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன், 24, உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, இவர்களை போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும், பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையில் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்ய சென்ற போலீசாரிடமிருந்து, இவர்கள் தப்ப முயன்றுள்ளனர்.
அப்போது ராகவேந்திரன், வெள்ளை செல்வா இருவரும் தவறி விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.
சிகிச்சைக்குப் பின், மூவரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.