/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா, குட்கா விற்பனை மூன்று பேர் கைது
/
கஞ்சா, குட்கா விற்பனை மூன்று பேர் கைது
ADDED : ஜன 16, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடைச் சேர்ந்தவர் சங்கர், 51. வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடையில், அரசு தடை செய்துள்ள குட்கா புகையிலை பொருட்களை விற்பதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று, கடையில் சோதனை நடத்தி, 1,450 ரூபாய் மதிப்புள்ள, ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 1,450 பாக்கெட்டுகளை கண்டறிந்தனர். அவரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில், கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், 21, மெய்யூரைச் சேர்ந்த இலியாஸ், 22, ஆகியோரை, கல்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

