/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரியில் கஞ்சா விற்ற மூவர் கைது
/
பொத்தேரியில் கஞ்சா விற்ற மூவர் கைது
ADDED : நவ 11, 2024 11:59 PM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள சுடுகாட்டில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூவரும் கேரள மாநிலம், குருவள்ளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 29, திருவள்ளூர் அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 26, பொத்தேரி பாரதியார் தெருவை சேர்ந்த கீர்த்தி, 24, என்பது தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து, 75,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.