ADDED : ஜன 11, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 21. மேலவலம்பேட்டை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன், 25. குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 26.
இவர்கள் மூன்று பேரும், மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் ஏரிக்கரை மதகு அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 2.300 கிலோ கஞ்சா மற்றும் 'யமஹா எப் இசட்' இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மூவரையும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.