/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முன்விரோதத்தில் கொலை முயற்சி ஒத்திவாக்கத்தில் மூவர் சிக்கினர்
/
முன்விரோதத்தில் கொலை முயற்சி ஒத்திவாக்கத்தில் மூவர் சிக்கினர்
முன்விரோதத்தில் கொலை முயற்சி ஒத்திவாக்கத்தில் மூவர் சிக்கினர்
முன்விரோதத்தில் கொலை முயற்சி ஒத்திவாக்கத்தில் மூவர் சிக்கினர்
UPDATED : மார் 21, 2025 02:25 AM
ADDED : மார் 20, 2025 09:11 PM
திருப்போரூர்:கொலை முயற்சி திட்டத்துடன் சுற்றிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்.
இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த இரு வாரங்களுக்கு முன், கொட்டமேடு தனியார் மண்டபத்தில் நடந்தது.
அங்கு சரத்குமாரின் நண்பர் சஞ்சய் என்பவர், விழாவிற்கு வந்திருந்த நண்பர்களுக்கு மது வினியோகம் செய்தார். அப்போது ஒத்தி வாக்கத்தை சேர்ந்த ரவுடி சுனில் என்கிற சுதர்சன், கூடுதல் மதுபாட்டில் கேட்டுள்ளார். இதனால், சஞ்சய் உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் ஒத்திவாக்கத்தைச் சேர்ந்த பவன் என்பவர் பிறந்தநாள் 'பார்ட்டி' நடந்துள்ளது. இதில் மேற்கண்ட சரத்குமார், சஞ்சய், சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பார்ட்டியில் சுதர்சன், ஏற்கனவே நடந்த சரத்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூடுதல் மதுபாட்டில் கொடுக்காதது குறித்து பேசியுள்ளார்.
இதனால் சரத்குமார், சஞ்சய் ஆகியோருடன் சுதர்சனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபத்தில் இருந்த சுதர்சன், கடந்த 15ம் தேதி தன் நண்பர்களுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர் இல்லாததால், வீட்டு கதவு ஜன்னலை உடைத்துள்ளார்.
தொடர்ந்து, சரத்குமாரின் நண்பர் சஞ்சயை தாக்க, பெருமாட்டுநல்லுார் பகுதிக்கு சென்று வீடு வீடாக தேடியுள்ளனர். அப்போது அங்கிருந்தோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே, கூடுவாஞ்சேரி போலீசார் இருவர் பைக்கில் அங்கு சென்ற போது, காரில் வந்த சுதர்சன் கும்பல், போலீசாரின் பைக் மீது மோதிவிட்டு தப்பியுள்ளனர். இதில், போலீசார் இருவருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம்இரவு, ஒத்திவாக்கம் மலைக்கோவில் அருகே பதுங்கி இருந்த சுதர்சன்,20, சேவகரத்தினம், 24, பாலாஜி, 20, ஆகிய மூன்று பேரை கைதுசெய்தனர்.