/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லாட்டரி விற்பனையில் தொடர்புள்ள மூவர் கைது
/
லாட்டரி விற்பனையில் தொடர்புள்ள மூவர் கைது
ADDED : ஜன 08, 2025 08:43 PM
செங்கல்பட்டு:செங்கப்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக இப்ராஹீம், 44, என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தில் இருந்து லாட்டரி சீட்டு கொண்டு வந்து விற்பனை செய்வது தெரிந்தது.
இதையடுத்து, கோவை மாவட்டம் சென்ற போலீசார், இது தொடர்பாக பெரிய நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசான்,39, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜலீல்,40, ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஆரிப், 46, ஆகிய மூவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணைக்குப் பின், மூவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

