/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல்போன் திருட்டு 2 சிறார் உட்பட மூவர் கைது
/
மொபைல்போன் திருட்டு 2 சிறார் உட்பட மூவர் கைது
ADDED : மார் 20, 2025 09:01 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு,29.
கடந்த 14ம் தேதி இரவு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள 'பெட்ரோல் பங்க்'கில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.
செங்கல்பட்டு வேதா சிக்கன் கடை அருகில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு துாங்கி உள்ளார்.
நள்ளிரவு எழுந்து பார்த்த போது, பாபு பாக்கெட்டில் இருந்த 'சாம்சங்' ரக மொபைல்போனை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்தனர்.
இதில், செங்கல்பட்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சந்தோஷ்,22, அவரது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.