/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பா.ஜ., பிரமுகரை தாக்கிய மா.செ., உள்ளிட்ட மூவர் கைது
/
பா.ஜ., பிரமுகரை தாக்கிய மா.செ., உள்ளிட்ட மூவர் கைது
பா.ஜ., பிரமுகரை தாக்கிய மா.செ., உள்ளிட்ட மூவர் கைது
பா.ஜ., பிரமுகரை தாக்கிய மா.செ., உள்ளிட்ட மூவர் கைது
ADDED : ஆக 18, 2023 12:32 AM
சென்னை:சென்னை, கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 39; நங்கநல்லுாரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர்.
மடிப்பாக்கம், ராகவா நகரைச் சேர்ந்தவர் சுப்பையா. சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்த இவர், சென்னை கிழக்கு மாவட்ட செயலரானார்.
உட்கட்சி பூசல் மற்றும் மது அருந்திய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது தொடர்பாக, சுப்பையா, அவரது சகோதரி மகன் முத்தரசன், கட்சியின் மண்டல தலைவர் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர், நங்கநல்லுாரில் ராஜேஷை சரமாரியாக தாக்கி தலைமறைவாகினர்.
நெல்லை பாளையங்கோட்டையில் பதுங்கிஇருந்த மூவரையும், தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை கைது செய்தனர்.
அவர்களை, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் வைஷ்ணவி, வரும் 28ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

