/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்குகள் நேருக்குநேர் மோதல் மூன்று பேர் படுகாயம்
/
பைக்குகள் நேருக்குநேர் மோதல் மூன்று பேர் படுகாயம்
ADDED : ஜூலை 08, 2025 10:18 PM
செய்யூர்:தண்ணீர்பந்தல் கிராமத்தில், பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூவர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அறுவாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ்டான், 35. இவர், பைக்கில் சென்று, மளிகை கடைகளுக்கு சுண்ணாம்பு விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை 10:15 மணியளவில், 'ஸ்பிலெண்டர்' பைக்கில் திண்டிவனத்தில் இருந்து, செய்யூரில் உள்ள கடைகளுக்கு சுண்ணாம்பு விற்பனை செய்ய சென்றார்.
தண்ணீர்பந்தல் அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் மீது, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் போஸ்டான் மற்றும் எதிரே வந்த பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 42, மற்றும் முத்துலிங்கம், 48, ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.
செய்யூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.