/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொடர் மொபைல்போன் திருட்டு மறைமலைநகரில் மூவர் கைது
/
தொடர் மொபைல்போன் திருட்டு மறைமலைநகரில் மூவர் கைது
ADDED : பிப் 07, 2025 08:17 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த பேரமனுார் பகுதியில் நேற்று முன்தினம், மறைமலைநகர் குற்றப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த நபரை மடக்கிய போது, அவர் தப்பி ஓட முயன்றார்.
அந்த நபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட நபர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகுராஜா,35, என தெரிந்தது.
கடந்த ஒரு வருடமாக மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து, மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், நுாறுக்கும் மேற்பட்ட மொபைல் போன்களை திருடியதும் தெரிந்தது.
திருடிய மொபைல் போன்களை இவரிடமிருந்து வாங்கிய சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அகமத்கான்,26, வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி,53, ஆகியோரும் சிக்கினர்.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 25 விலை உயர்ந்த மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த மொபைல்போன்களில் இருந்து, உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து, மேற்கண்ட மூவரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.