/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு
/
செங்கையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு
ADDED : ஜன 28, 2025 07:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, 26.
செங்கல்பட்டு ராஜாஜி தெருவில், மொபைல் போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், அப்துல்லா கடையை மூடிவிட்டுச் சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, 5 மொபைல் போன்கள் திருடப்பட்டிருந்தன. அருகில், இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவர் நடத்தி வரும் அழகு நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, 8,500 ரூபாயும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் எலக்ட்ரானிக் கடையில் புகுந்து 7,500 ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கப்பட்டு நகர போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

