/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் நுங்கம்பாக்கம் சி.சி., வெற்றி
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் நுங்கம்பாக்கம் சி.சி., வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் நுங்கம்பாக்கம் சி.சி., வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் நுங்கம்பாக்கம் சி.சி., வெற்றி
ADDED : ஜன 22, 2025 12:21 AM

சென்னை, டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், நுங்கம்பாக்கம் சி.சி., அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில், மாம்பலம் மஸ்கிடோஸ் அணியை தோற்கடித்தது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. மூன்றாவது டிவிஷன் 'ஏ' மண்டல போட்டியில், நுங்கம்பாக்கம் சி.சி., மற்றும் மாம்பலம் மஸ்கிடோஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த, நுங்கம்பாக்கம் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 242 ரன்களை எடுத்தது. மாம்பலம் வீரர் குணசேலன், 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து பேட் செய்த, மாம்பலம் மஸ்கிடோஸ் அணி, 45.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 35 ரன்கள் வித்தியாசத்தில், நுங்கம்பாக்கம் சி.சி., வெற்றி பெற்றது.
மூன்றாவது டிவிஷன் 'பி' மண்டல போட்டியில், என்.ஆர்.சி., அணி, 49.2 ஓவர்களில், 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அணியின் வீரர் கபில், 138 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன், 100 ரன்கள் எடுத்தார். எதிர் அணியான பெருங்களத்துார் சி.சி., வீரர் இசக்கிமுத்து, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து பேட் செய்த பெருங்களத்துார் சி.சி., அணி, 49.1 ஓவர்களில் 224 ரன்கள் அடித்து போராடி தோல்வியடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில், மெக்னட் சி.சி., 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 86 ரன்களை எடுத்தது.
எதிர் அணியான ஜெம்ஸ் சி.சி., வீரர் பிரபு ராம், 21 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார். சொற்ப ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஜெம்ஸ் சி.சி., அணி, 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.