/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 மேல்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட ரூ. 17 கோடி
/
10 மேல்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட ரூ. 17 கோடி
10 மேல்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட ரூ. 17 கோடி
10 மேல்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட ரூ. 17 கோடி
ADDED : அக் 30, 2024 06:22 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பத்து அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட, நபார்டு வங்கி நிதியில் 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகள் என 144 பள்ளிகள் உள்ளன. இவற்றில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருத்துரு அனுப்பிவைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில், நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள், ஆய்வகம் கட்ட தலா 2.49 கோடி ரூபாய், கண்டிகை அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட 2.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல, திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட தலா 1.88 கோடி ரூபாய், நந்திவரம் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு 1.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கப்பாக்கம், திருப்போரூர், ஒரத்தி, அரசினர் மேல் நிலைப்பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்ட தலா 94.24 லட்சம் ரூபாய், எலப்பாக்கம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட 1.88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மொத்தம் 16.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பள்ளிக்கல்வித்துறை கடந்த 28ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின், பள்ளிகளுக்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட பொதுப்பணித்துறையினர் டெண்டர் விட்டு பணிகளை துவக்க உள்ளதாக, முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவித்தனர்.